தொடர்புக்கு : 0421-4238655

கும்பகோணம்

கும்பகோணம் தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர். காவிரிக் கரையில் அமைந்துள்ள கும்பகோணம், சென்னைக்கு 313 கி.மீ தெற்கிலும், திருச்சிக்கு 90 கி.மீ கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணம் "கோவில் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது.

சப்தஸ்தானங்களில் ஒன்று என்ற பெருமையுடன் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்று என்ற பெருமையும் இந்நகருக்கு உண்டு. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும்.



திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.